குழந்தைகளுக்கு சொத்தை வழங்காத ஆஸ்திரேலிய கோடீஸ்வர தம்பதி! தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு..ஏன் தெரியுமா?

குழந்தைகளுக்கு சொத்தை வழங்காத ஆஸ்திரேலிய கோடீஸ்வர தம்பதி! தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு..ஏன் தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் 2-வது பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ ட்விக்கி-நிகோலா தம்பதியினர், தங்கள் குழந்தைகள்  சொத்துக்கு வாரிசாக மாட்டார்கள் என்று அறிவிப்பு செய்துள்ளனர்.

இதையடுத்து  தங்களின் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இவர்களது சொத்து வீட்டு உதவி, கல்வி, புற்றுநோய் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங் களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட உடமைகள் மற்றும் பொருட்களைத் தவிர எல்லாவற்றையும் விட்டு விடுவதற்கான முடிவு எளிதானது என்றும்  நாம் செல்வந்தராக மறையகூடாது அதனால் என்ன பயன்? என்றும் இந்த பணக்கார தம்பதியினர் வினா எழுப்பி உள்ளனர்.