18 மாதங்களில்...மூன்றாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ...

ஒடிசாவில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் லடந்த 18 மாதன்ங்களில் 3 வது முறையாக கோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

18 மாதங்களில்...மூன்றாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ...

பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான சுகந்த நாயக் என்பவர் கடந்த 18 மாதங்களில் மூன்றாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.இஅவர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

ஒடிசா மாநிலம் பேலாசூர் மாவட்டத்தை சேர்ந்த அவர் கடந்த 2020 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் இரண்டாவது முறையாக பாதிப்பிற்கு ஆளனதாக தெரிகிறது.மேலும் இரண்டு முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட நிலையிலும் அவரது மாதிரிகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இதில் இவருக்கு மீண்டும் கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.ஒடிசாவில் மட்டும் இதுவரை 50 எம்.எல்.ஏ க்கள், 6 எம்.பி.க்கள், 11 அமைச்சர்கள் என அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.