ஆன்லைனில் 1.4 லட்ச ரூபாய்க்கு பொருட்களை ஆர்டர் செய்து தாய்க்கு அதிர்ச்சி கொடுத்த குழந்தை!

அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் 22 மாத குழந்தை செய்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஆன்லைனில் 1.4 லட்ச ரூபாய்க்கு பொருட்களை ஆர்டர் செய்து தாய்க்கு அதிர்ச்சி கொடுத்த குழந்தை!

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 2 வயது குழந்தையான அயன்ஷ் குமார் ஆன்லைனில் தனது தாயின் செல்போன் மூலமாக 1.4 லட்ச ரூபாய்கு மரச்சாமன்களை ஆர்டர் செய்துள்ளார்.

அந்த இரண்டு வயது குழந்தையானது தனது தாய் மது வால்மார்ட் இணையத்தை பயன்படுத்தி பொருட்களை ஆர்டர் செய்து வருவதை கவனித்து வந்ததாக சொல்லப்படுகிறது.அவர் இல்லாதபோது அவரின் தற்செயலாக அந்த இணையத்தை பயன்படுத்தி அக்குழந்தை இந்த சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது. அக்குழந்தை பொருட்களை ஆர்டர் செய்துள்ளது தாய்க்கு தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் திடீரென அக்குழந்தை ஆர்டர் செய்த பொருட்கள் அனைத்தும் வீட்டு வாசலில் வந்து இறங்கிய போது அவரின் பெற்றோர் தன் குழந்தை செய்த செயலை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மிகப்பெரிய அளவில் பேக்கிங் செய்யப்பட்டு வந்த பொருட்களை கண்டு திகைத்து போனதாக கூறப்படுகிறது. இதனை கண்ட பின்பு அவரது தாய் வால்மார்ட் கணக்கில் சென்று பார்த்த போது அதில் நாற்காலிகள் மற்றும் பூக்கூடைகள் என அவர்களுக்கு தேவையில்லாத பொருட்களை ஆர்டர் செய்திருப்பது தெரியவந்தது.மேலும் இது தனது மகனின் குறும்பு வேலை என்பதனையும் அறிந்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அயன்ஷின் தந்தையான பிரமோத் குமார் கூறுகையில் அவர் இதை செய்தார் என்று நம்புவது மிக கடினமான ஒன்றாகும் ஆனால் அது தான் நடந்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் இதையெல்லாம் குழந்தை எப்படி ஆர்டர் செய்திருப்பான் என அதனை நினைத்து இதுவரை சிரித்துக்கொண்டிருப்பதாக கூறுகின்றனர். மேலும் செல்போனின் கடவுசொல்லை இனி அவர் அறிந்து கொள்ளாத வகையில் கடிமான கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும் என கூறுகின்றனர்.