ஜூனியர் பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டி...இந்தியாவை சேர்ந்த பெண் தேர்வு!

ஜூனியர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு தர வரிசையில், இடம்பெற்றுள்ள இந்தியாவின் தஸ்னிம் என்ற பெண்.

ஜூனியர் பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டி...இந்தியாவை சேர்ந்த பெண் தேர்வு!

ஜூனியர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு தர வரிசையில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனை என்ற பெருமையை இந்தியாவின் தஸ்னிம் பெற்றுள்ளார்.

சர்வதேச பாட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் 'ஜூனியர்' பெண்கள் பிரிவுக்கான தரவரிசை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் 10 ஆயிரத்து 810 புள்ளிகளுடன், 16 வயதான இந்திய வீராங்கனை தஸ்னிம் மிர் முதலிடம் பிடித்துள்ளார். 

இவர் சர்வதேச ஜூனியர் பேட்மிண்டன் தொடர்களில் 4 முறை கோப்பை வென்றுள்ளார். மேலும் கிட்டதட்ட 22 போட்டிகளிலும் வெற்றிவாகை சூடியுள்ளார்.  6 வயதில் பேட்மிண்டன் பயிற்சியை துவங்கிய தஸ்னிம், அடுத்தாண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவிற்கென பதக்கம் வெல்ல தீவிரம் காட்டி வருகிறார்.