20 யூடுயூப் சேனல்களுக்கு தடை!

இந்தியாவுக்கு எதிராக பொய்பிரச்சாரம் செய்து வந்த பாகிஸ்தானில் இயங்கக்கூடிய 20 யூடுயூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

20 யூடுயூப் சேனல்களுக்கு தடை!

இந்தியாவுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வந்து சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து போலி செய்திகளை பரப்பி வந்த 20 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

இதை குறித்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது, தடை செய்யப்பட்ட யூடுயூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் பாகிஸ்தானில் இருந்து ஒருங்கினைக்கப்பட்ட தவறான தகவல் வலையமைப்பினை சேர்ந்தவையாக சொல்லப்படுகிறது.இவை அனைத்தும் போலி செய்திகளை மட்டுமே குறி வைத்து வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப விதிகள் 2021-ன் விதி 16-ன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களுக்கு தடைவிதித்துள்ளது

முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி 200க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
.