ஐரோப்பியாவில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை.. மின்சார கார்களை மட்டுமே பயன்படுத்த வேண்டுமாம்..!

ஐரோப்பியாவில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை.. மின்சார கார்களை மட்டுமே பயன்படுத்த வேண்டுமாம்..!

பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை:

புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை விற்பனையை தடை செய்ய உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு காரணமாக காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கு மட்டும் அனுமதி:

அதன்படி வரும் 2035ம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை விற்பனை செய்வதை தடை செய்யும் ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கையெழுத்திட்டுள்ளது. தொடர்ந்து மின்சார வாகனங்களுக்கு மக்கள் மாறுவதை வழக்கமாக்குவதற்கு முன்முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.