கழிவுநீரிலிருந்து தயாரிக்கப்பட்ட பியர்...மதுப்பிரியர்களிடையே மிகுந்த வரவேற்பு...!

கழிவுநீரில் இருந்து பியர் தயாரிக்கப்படுவதாக சிங்கப்பூரில் இருந்து தகவல் வெளியானது. 

கழிவுநீரிலிருந்து தயாரிக்கப்பட்ட பியர்...மதுப்பிரியர்களிடையே மிகுந்த வரவேற்பு...!

கழிவுநீரிலிருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரின் மூலமாக இந்த பியர் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நியூப்ரூ என பெயர் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். 

கழிவுநீரை முதலில் சிங்கப்பூர் குடிநீர் விநியோக சுத்தகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னதாக பம்ப் செய்யப்பட்டு பின்னர் அதனை வடிகட்டியவுடன் நீராக மாறுவதாக சொல்லப்படுகிறது. மறுசுழற்சிக்கு பின்னதாக வரும் இந்த நீருக்கு பிராண்ட் பெயர் நியூவாட்டர் எனப்படுகிறது. இந்த குடிநீரை பீர் தயாரிப்புக்கு பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். 

மேலும் சிங்கப்பூரில் தேசிய நீர் நிறுவனங்களோடு இணைந்து உள்ளூர் மதுபான கடைக்களுக்கும் , நிறுவனங்களுக்கும் இந்த ப்ரூவ்ர்க்ஸ் சிறப்பு பீரை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த பீரை கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்டதா என்ற சலசலப்பான கேள்விகள் இருந்தாலும், சிங்கப்பூர் முழுவதிலுமாக இந்த சிறப்பு பீரை பற்றி தான் அதிகம் பேசப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதனை அருந்தும் மது பிரியர்கள் பீர் மிகவும் சுவையாக இருப்பதாகவும்  தெரிவித்து வருகின்றனர். 

இந்த பீருக்கு மதுப்பிரியர்களின் மத்தியில் எதிர்பார்த்ததை விடவும் அதிகளவிலான வரவேற்பு கிடைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இது மறுசுழற்சியின் முக்கியத்துவத்தினை ஊக்குவிக்கும் முயற்சியாக இருந்து வருகிறதாம். நாட்டில் பற்றாக்குறையானது அதிகரிக்கத் தொடங்கியதன் காரணமாக கழுவுநீரை சுத்தகரித்து குடிநீராக மாற்றும் நீர் மறுசுழற்சி தொழில்நுட்பத்தை அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

முதலில் இந்த கழிவு நீரில் இருக்கும் கிருமிகள் நீக்கம் செய்யப்பட்டதற்கு பின் புற ஊதாக் கதிர்களை கொண்டு சுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவை குடிநீராக மாறுவதற்கு முன் பல்வேறு சுத்தகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு அதன்பின்னதாக பயன்பாட்டிற்கு வருகிறது.