தலிபான்களால் செய்த சம்பவம்...நீதி கேட்காத அரசாங்கம்....

தலிபான்களால் செய்த சம்பவம்...நீதி கேட்காத அரசாங்கம்....

ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் சுஹைப் ஜூபேரி, சமூக ஊடகங்களில் தலிபான்களின் கொடூரம் குறித்து தகவல் அளித்துள்ளார். சுஹைப் அளித்த தகவலின் படி, தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பன்னு மாவட்டத்தின் ஜானி கேல் பகுதியில் நடந்துள்ளது. 

கொடூர செயல்:

தலிபான்கள் அவர்களது கொடூரத்தை வெளிகாட்டும் விதமாக, பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை கொன்றுள்ளனர்.  கொலை செய்ததோடு தலிபான்கள் நிற்கவில்லை.  பாகிஸ்தான் ராணுவ வீரரின் தலையை துண்டித்து மரத்தில் தொங்கவிட்டுள்ளனர்.  

சிக்கிய கடிதம்:

ஒரு ஊடக அறிக்கையின்படி, தலிபான்கள் ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளனதாக தெரிகிறது.  அதில் இறந்தவரின் இறுதிச் சடங்கில் யாராவது கலந்து கொண்டால், அவருக்கும் அதே கதிதான் ஏற்படும் என்று எழுதப்பட்டுள்ளது.  கொல்லப்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரரின் பெயர் ரெஹ்மான் ஜமான்.

நடவடிக்கை எடுக்காத அரசாங்கம்:

இருப்பினும், தலிபான்களின் இந்த கொடூரம் குறித்து பாகிஸ்தான் அரசு மற்றும் அதன் ராணுவம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.  அதே சமயம் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் சுஹைப் ஜூபேரி, சமூக ஊடகங்களில் தலிபான்களின் கொடூரம் குறித்து தகவல் அளித்துள்ளார். சுஹைப் அளித்த தகவலின் படி, தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பன்னு மாவட்டத்தின் ஜானி கேல் பகுதியில் நடந்துள்ளது. 

நடந்தது என்ன?:

ரெஹ்மான் ஜமானும் அவரது மகனும் தலிபான்களால் வீட்டிற்குள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  திங்கட்கிழமை இரவு தனது கணவரும் மகனும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பலத்த சத்தம் கேட்டதாக கொல்லப்பட்டவரின் மனைவி அவரது வாக்குமூலத்தில் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.  

அவர் படுக்கையறையை விட்டு வெளியே வந்தபோது, ​​வீட்டிற்குள் ஆயுதம் ஏந்திய 20 பேர் இருப்பதைக் கண்டதாகவும் அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்தியவர்கள் சுட்ட பின்னர் அவரது கணவரின் உடலை சிதைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ”ஆண்களைப் பூட்டுங்கள்... அவர்களே சிக்கலை உருவாக்குகிறார்கள்...பெண்கள் சுதந்திரமாக நடக்கட்டும்...” கேரளா உயர் நீதிமன்றம்