அமெரிக்க மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி- நிபுணர் ஆலோசனை

அமெரிக்காவில் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளதால், அங்குள்ள மக்களுக்கு மூன்றாவது டோஸாக பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரு தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள், முககவசம் இன்றி செல்லலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலை மாறி, அமெரிக்காவில் கடந்த 6 மாதங்கள் இல்லாத அளவுக்கு மீண்டும் தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

டெல்டா வகை வைரஸின் தாக்கத்தால், தினசரி பாதிப்பு ஒரு லட்சமாக உயர்ந்துள்ளதோடு, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் மீண்டும் தொற்று பாதித்து வருகிறது.

இந்தநிலையில் குறைந்த நோய் எதிர்ப்பு திறன் உள்ளவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் டோஸினை செலுத்துவது சிறந்தது என அந்நாட்டு நோய் தடுப்பு ஆலோசகர் ஆண்டனி பவுசி அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உறுப்பு தானம் பெற்றவர்கள் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக கீமோதெராபி சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்த 3வது தவணை ஊசியை செலுத்துவது அவசியம் என கூறியுள்ளார்.