துருக்கி - சர்வதேச ஒட்டகச்சண்டை...போட்டி போட்டு மோதிக் கொள்ளும் ஒட்டகங்கள்!!

துருக்கியில் நடத்தப்பட்டு வரும் ஒட்டகச் சண்டைக்கு உயிரின ஆர்வலர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றனர்.

துருக்கி - சர்வதேச ஒட்டகச்சண்டை...போட்டி போட்டு மோதிக் கொள்ளும் ஒட்டகங்கள்!!

சேவல் சண்டை, ஆட்டு சண்டை போன்றது போல துருக்கியில் சாதரணமாக நடத்தப்பட்டு வரும் ஒட்டக சண்டை.இந்த ஒட்டக சண்டையானது அங்கு புகழ்பெற்ற ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.

அந்நாட்டில் உள்ள இஸ்மிர் என்ற நகரில், 40 ஆவது சர்வதேச ஒட்டகச் சண்டை போட்டி நடத்தப்பட்டது. இதில் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட 152 ஒட்டகங்கள் களமிறங்கி மோதியுள்ளன. பழமையான இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு களித்து மகிழ்ந்து வந்துள்ளனர்.

இதனிடையே போட்டியின்போது ஒட்டகங்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, விலங்குகள் உரிமைகளுக்கான கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.இதனை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஒட்டகங்களின் உரிமையாளர்கள் அதற்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என சமாளிப்பதிலேயே அடவடியாக நின்றுள்ளனர். இதனை தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த அவர்கள் மேலும் ஒட்டகங்களை மோதவிட்டு போட்டிகளை நடத்தி மகிழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.