ஒரே வாரத்தில்  719 பேர் பலி: பொதுமக்கள் பீதி!!

கனடாவில்  சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால், ஒரே வாரத்தில்  719 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரே வாரத்தில்  719 பேர் பலி: பொதுமக்கள் பீதி!!

கனடாவில்  சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால், ஒரே வாரத்தில்  719 பேர் உயிரிழந்துள்ளனர்.

பருவநிலை மாற்றம் என்பது உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒன்றாக மாறியுள்ளது. இதனால் பருவம் தவறிப் பெய்யும் மழை, அதிகரிக்கும் வெப்பம் ஆகியவற்றால் விவசாயிகள் முதல் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கனடா நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த ஒரு வார காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ந்து வெப்ப அலை வீசி வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்ப நிலையால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் உயிரிழந்து வருகின்றனர்.

கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி 7 நாட்களில் மட்டும் 719 பேர் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிள்ளது.