எளிதில் பிடிக்க முடியல.. கோபத்தில் புதின்.. தீவிரமடையும் போர்? - அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட வாய்ப்புள்ளதாக  அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

எளிதில் பிடிக்க முடியல.. கோபத்தில் புதின்.. தீவிரமடையும் போர்? -  அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 14வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய இடங்களை பிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன.

உக்ரைன் படைகளுக்கும் தக்க பதிலடி கொடுத்து வருவதால், போர் நீண்டு கொண்டே செல்கிறது.  போரால் இருநாட்டு வீரர்கள், அப்பாவி மக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீதான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதன்பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. உக்ரைனை எளிதில் பிடித்து விடலாம் என நினைத்த ரஷ்யாவுக்கு அது கடினமான செயலாக மாறியுள்ளது. மேலும், உலகளவில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ரஷ்ய அதிபர் புதின் மிகவும் கோபமாக உள்ளார். தோல்வி அடையக்கூடாத போராக உக்ரைன் போரை அவர் கருதுகிறார். எனவே, உக்ரைன் மீதான தாக்குதலை புதின் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.