இந்தியா திரும்பிய மாணவர்கள்: மத்திய அரசும், தேசிய மருத்துவ ஆணையமும் பதிலளிக்க உத்தரவு..!

இந்தியா திரும்பிய மாணவர்கள்: மத்திய அரசும், தேசிய மருத்துவ ஆணையமும் பதிலளிக்க உத்தரவு..!

உக்ரைனில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவர்களை, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்திய திரும்பிய மருத்துவ மாணவர்கள்:

உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் ஏற்பட்ட போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் பயின்ற இருபதாயிரம் மாணவர்கள் இந்தியா திரும்பி உள்ளனர். அவர்கள் இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயில்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, வெளியுறவுத் துறைக்கான மக்களவை குழு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது. 

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:

ஆனாலும், மத்திய அரசு மற்றும் தேசிய ஆணையம் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வெளியுறவுக்கான மக்களவைக் குழு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இன்று விசாரணை: 

இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவி சிக்ரி, உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பியுள்ள மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றபோதிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்கள் என்று தெரிவித்தார். 

இதையும் படிக்க: சசிகலாவின் ”ஒற்றுமை”... எஸ்கேப் ஆன முன்னாள் அமைச்சர்...செய்தியாளர்களிடம் கூறிய 3 வார்த்தை...!

மேலும், கேரள மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இப்போதுள்ள சூழலில் இந்திய மாணவர்கள் உக்ரைனுக்கு திரும்ப முடியாது என்று தெரிவித்தார். 

ஒத்தி வைப்பு:

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ கல்வி ஆணையம் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.