3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி

3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட  அனுமதி

உலகிலேயே முதன்முறையாக 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட சீனா அனுமதி வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் அதி தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் இன்று வரை உயிரிழந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு, மாத்திரை மருந்துகள் வழங்கப்பட்டு வந்தாலும் தடுப்பூசி ஒன்று மட்டுமே நோயிலிருந்து காப்பாற்றும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு நாடுகள் சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் தற்போது உலக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.  

அந்த வகையில், சீனாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு சினோவாக் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குழந்தைகளுக்கும் அந்த தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனையில் தடுப்பூசி குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியை தூண்டுவதுடன், பாதகமான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.