சீனாவால் கடத்தப்பட்ட இளைஞர் விரைவில் ஒப்படைப்பு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

சீன ராணுவத்தால் கடத்தப்பட்ட  அருணாச்சல பிரதேச இளைஞரை விரைந்து ஒப்படைக்க அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், குடியரசு தினத்தை முன்னிட்டு ஹாட்லைன் வாயிலாக சீன ராணுவத்துடன் உரையாடியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட  இளைஞரை திரும்ப ஒப்படைக்க சீனா முன்வந்துள்ளதாகவும், விரைவில் ஒப்படைப்பதற்கான தேதி மற்றும் இடம் அறிவிக்கப்படும் என சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.