தடுப்பூசியும் இப்படித்தானா..? சீனா தடுப்பூசிகளால் சிறப்பான பலனில்லை... உலக நாடுகள் அதிருப்தி...

சீனாவின் தடுப்பூசிகளை பயன்படுத்திய நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தடுப்பூசியும் இப்படித்தானா..? சீனா தடுப்பூசிகளால் சிறப்பான பலனில்லை... உலக நாடுகள் அதிருப்தி...
சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பல்வேறு வளர்ந்த நாடுகள் பயன்படுத்தி வரும் காரணமாக, அதற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் எளிதில் கிடைக்க கூடிய சீனாவின் சினோஃபார்ம் மற்றும் சினோவாக் தடுப்பூசிகளை மங்கோலியா, சிலி, பஹ்ரெய்ன், செய்ஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்துகின்றன.
 
ஆனால் இந்த தடுப்பூசிகள், புதிய வகை வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை என பல்வேறு நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இதனால் தொற்று பாதிப்பும் அதிகரித்து வருவதாக அந்த நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. தொற்றுக்கு எதிராக சினோஃபார்ம் 78 சதவீதமும், சினோவாக் 51 சதவீதம் மட்டுமே செயல்திறன் அளிப்பது குறிப்பிடத்தக்கது.