தொடரும் ஏவுகணை தாக்குதல்கள்....பதற்றத்தில் மக்கள்...என்ன செய்ய போகிறது உக்ரைன்?!!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளது.  வெடி சத்தம் கேட்டு மக்கள் அங்கும் இங்கும் ஓடினர்.

தொடரும் ஏவுகணை தாக்குதல்கள்....பதற்றத்தில் மக்கள்...என்ன செய்ய போகிறது உக்ரைன்?!!

உக்ரைனில் ரஷ்யா பேரழிவை உருவாக்கியுள்ளது.  நாடு முழுவதும் மக்கள் பீதியால் உறைந்துள்ளனர். ரஷ்யா உக்ரைனின் தலைநகரான கீவ் மீது 100 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளது.

வெடி சத்தம் கேட்டு மக்கள் அங்கும் இங்கும் ஓடினர்.  அதிபர் அலுவலகத்தின் ஆலோசகரான ஒலேக்சி, பேஸ்புக்கில் தாக்குதல் பற்றி தெரிவித்த நிலையில், உக்ரைனின் மைக்கோலேவ் பகுதியின் தலைவரும் ரஷ்ய ஏவுகணைகளின் தாக்குதல் குறித்து தெரிவித்துள்ளார்.  

இதற்கு முன்பும் கெர்சனில் உள்ள பொதுமக்களை நோக்கி ரஷ்யா பல ராக்கெட் லாஞ்சர்களில் இருந்து 33 ஏவுகணைகளை வீசியுள்ளது.   பொதுமக்களை குறிவைத்ததாக வெளிவந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள பக்முட் நகரைச் சுற்றியும் கடுமையான சண்டைகள் தொடர்ந்தன.

அண்டை நாடான பெலாரஸில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய ஜெட் விமானங்கள் தொடர்ந்து தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து நாடு தழுவிய எச்சரிக்கை அறிவிக்கப்படலாம் என்று உக்ரேனிய சமூக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ஊருக்கு மட்டும்தான் உபதேசமா....ரஷ்யாவை தாக்கி பேசிய அமெரிக்கா...காரணம் என்ன?!!!