கொரோனா தடுப்பூசி போடலைன்னா ஹோட்டல் போகக் கூடாது.... அரசின் அதிரடி அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை ஹாங்காங் அரசு விதித்துள்ளது

கொரோனா தடுப்பூசி போடலைன்னா ஹோட்டல் போகக் கூடாது.... அரசின் அதிரடி அறிவிப்பு

ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக புதிதாக யாரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகாத நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனாவின் 5வது அலை தாக்குவதைத் தடுப்பதற்கான முயற்சியில் ஹாங்காங் அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது.

கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளாதவர்களுக்குக் கட்டுப்பாடுகளை ஹாங்காங் அரசு விதித்துள்ளது. அதன்படி, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், ஹோட்டல்கள், சினிமா அரங்குகள், பொது நிகழ்ச்சிகள், கல்லூரிகளுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இதுவரை 18 சதவீத மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.