உக்ரைனில் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு மரண தண்டனை? : கடும் கண்டனம் தெரிவிக்கும் அமெரிக்கா !!

உக்ரைனில் சிறைபிடிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் படை வீரர்களுக்கு மரண தண்டனை என ரஷ்யா கூறுவது பயங்கரவாதம் என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. 

உக்ரைனில் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு மரண தண்டனை? : கடும் கண்டனம் தெரிவிக்கும் அமெரிக்கா !!

உக்ரைனுக்கு ஆதரவாக வெளிநாட்டு கூலிப்படைகள் களத்தில் இருப்பதாக குற்றம் சாட்டி வரும் ரஷ்யா அதனை உறுதிப்படுத்தும் வகையில் பலரை சிறைபிடித்து வைத்துள்ளது. இவர்களில் பிரிட்டன் மற்றும் மொரோக்காவைச் சேர்ந்த 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிடிபட்டுள்ள அமெரிக்க முன்னாள் படை வீரர்களுக்கும் மரண தண்டனை கிடைக்காது என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்திருந்தார். 

இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷ்யாவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இது போன்று பேசியிருப்பது பயங்கரவாதம் என்பதுடன் திகைப்பூட்டும் விஷயம் என்றும் கூறினார்.

அமெரிக்காவை மிரட்டும் நோக்கில் பேசுவதை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டார். ஆனால், பிடிபட்டவர்கள் அமெரிக்க பிரஜை என்றாலும்  வெளிநாட்டு கூலிப்படை என்ற அடிப்படையில்தான் முடிவெடுக்கப்படும் என்று ரஷ்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.