கடலில் கசிந்துள்ள எண்ணெயை பொதுமக்களின் தலைமுடியை கொண்டு அகற்ற முடிவு - பெரு நாட்டில் ஆயிரக்கணக்கனோர் தலைமுடி தானம்..

பெருவில் கட்லில் கசிந்து காணப்படும் எண்ணெய்களை நீக்குவதற்காக கற்கள் மற்றும் பொதுமக்களின் தலைமுடியை தேர்வு செய்து கடலை சுத்தப்படுத்தி வருகின்றனர்.

கடலில் கசிந்துள்ள எண்ணெயை பொதுமக்களின் தலைமுடியை கொண்டு அகற்ற முடிவு - பெரு நாட்டில் ஆயிரக்கணக்கனோர் தலைமுடி தானம்..

பெருவில் கடலில் கலந்துள்ள எண்ணெய் படலத்தை நீக்க ஏராளமானோர் தங்கள் முடியை தானமாக வழங்கி வருகின்றனர்.  பெருவில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணெய் கொண்டு சென்ற கப்பலில் ஏற்பட்ட கசிவு காரணமாக சுமார் 3 கிலோ மீட்டர் கடற்பரப்பு மாசடைந்ததுள்ளதாக தெரிவிக்கின்றனர்.6,000 பேர்லல் எண்ணெய் கடலில் கலந்துள்ளதாகவும் 21 கடற்கரைகள் இந்த எண்ணெய் கழிவுகளால் மாசடைந்து காணப்படுவதாகவும் அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் கவலை அடைந்துள்ளது.

இதனிடையில் இந்த எண்ணெய் கசிவை அகற்ற புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது பெரு சுற்றுச்சூழல் அமைச்சகம். சிகை அலங்கார நிபுணர்கள் உதவியுடன் லிமா நகராட்சி அலுவலகத்தில் முடி சேகரிப்பு மையமும் அமைக்கப்பட்டது.

இதனை அறிந்த அந்நாட்டு மக்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்க தங்கள் முடியை தானமாக வழங்க படையெடுத்துள்ளனர். அண்மையில் டாங்கோ அருகே கடலில் எரிமலை வெடித்ததின் எதிரொலியாக பெருவில் எழுந்த உயர் அலைகளால் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்ததே இந்த பேரிடருக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.