இனி நியூயார்க்கிலும் தீபாவளிக்கு விடுமுறை.. மேயரின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..!

தீபாவளி கொண்டாடும் சுமார் 2 லட்சம் பேர் நியூயார்க்கில் வசிக்கின்றனர்..!

இனி நியூயார்க்கிலும் தீபாவளிக்கு விடுமுறை.. மேயரின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..!

தீபாவளி:

பண்டிகைகள் என்பது மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும், இதில் சாதி, மதம், நாடு என்பதெல்லாம் கிடையாது என்பதை அமெரிக்காவின் நியூயார்க் நகர் எடுத்திருக்கும் முடிவு பறைசாற்றுகிறது. தீபாவளி என்பது இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. 

விடுமுறையை தேடும் மக்கள்:

இந்த பண்டிகையை இந்துக்களை தாண்டி, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி இருந்து வருகிறது. புது வருடம் பிறக்கும் போதே தீபாவளி என்று என்பதை தான் காலண்டரில் பார்க்கும் இளைஞர்களும், மாணவர்களும், மக்களும் உள்ளனர். 

வெளிநாடுகளிலும் கொண்டாட்டம்:

இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் தீபாவளி பண்டிகையை தலைவர்கள் கொண்டாடுவதும், வாழ்த்துகள் சொல்வதும் வழக்கமான ஒன்று தான். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இந்தியாவில் இருந்து பல லட்சம் மக்கள் வெளிநாடுகளுக்கு சென்று அங்கேயே செட்டில் ஆகி வருகின்றனர்.

அடுத்தாண்டு முதல் விடுமுறை: 

அப்படி செட்டில் ஆகும் மக்கள் அல்லது வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் தங்கும் மக்கள் தீபாவளியை கொண்டாட ஏதுவாக அமெரிக்காவின் நியூயார்க்கில் அடுத்தாண்டு முதல் பள்ளிகளில் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் முதல் வியாழன்:

நியூயார்க்கில் தீபாவளி கொண்டாடும் இந்து, புத்த, சீக்கிய, ஜைன மதங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்தியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தீபாவளிக்கு அடுத்த ஆண்டு முதல் விடுமுறை அளிக்கப்படுவதாக நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். ஜுன் மாதம் முதல் வியாழன் தீபாவளியாக அங்கு கடைபிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.