தலிபான் ஆட்சியை சீர்குலைக்க வேண்டாம்...  அமெரிக்காவிற்கு தலிபான் தலைவர்கள் எச்சரிக்கை...

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை சீர்குலைக்க வேண்டாம் என, அமெரிக்காவிற்கு தலிபான் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தலிபான் ஆட்சியை சீர்குலைக்க வேண்டாம்...  அமெரிக்காவிற்கு தலிபான் தலைவர்கள் எச்சரிக்கை...

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதை அடுத்து, அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இந்நிலையில், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலிபான் தலைவர்களுக்கு இடையிலான நேரடி பேச்சுவார்த்தை, கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்றது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தாகி, ஆப்கானிஸ்தானில் தங்களது அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சிப்பது யாருக்கும் நல்லதல்ல என, அமெரிக்க தலைவர்களிடம் தெளிவாக கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆப்கானிஸ்தான் எதிர்கொள்ளும் சிரமங்களை பற்றி விவாதிக்க, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் தெரிவித்தார். ஆனால், இந்த பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.