3 -ஆம் உலகப் போரில் இங்கிலாந்து அழிவது உறுதி - ரஷ்ய ராணுவ வீரர் எச்சரிக்கை!

3 -ஆம் உலகப் போரில் இங்கிலாந்து அழிவது உறுதி - ரஷ்ய ராணுவ வீரர் எச்சரிக்கை!

மூன்றாம் உலகப் போர் மூண்டால் இங்கிலாந்து முழுமையாக அழிக்கப்படுவது உறுதி என்று ரஷ்யாவின் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் ஈவ்ஜெனி புஷ்கின்ஸ்கை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் புதிய ராணுவ தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள சர் பேட்ரிக் சாண்டர்ஸ், 3-ம் உலகப் போரில் ரஷ்யாவைத் தோற்கடிக்க வேண்டும் என்று படை வீரர்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ரஷ்ய அதிபர் புதினின் ஆதரவாளரும் ஓய்வு பெற்ற ஜெனரலுமான ஈவ்ஜெனி, மூன்றாம் உலகப்போரின் விளைவாக இங்கிலாந்து காணாமல் போய்விடும் என்பது சாண்டர்சுக்கு புரியவில்லை என்று கூறியுள்ளார்.

நாடே அழிந்து விடும் நிலையில் அவரும் அவரது சந்ததியும் எங்கே வாழ்வார்கள் என்பது எங்களுக்கேத் தெரியாது என்றும் அவர் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.