காவல்துறைக்கு பயந்து கஞ்சா பொட்டலத்தை விழுங்கிய நபர்... முதலுதவி அளித்த போலீஸ்

அமெரிக்காவில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக, கஞ்சா பொட்டலத்தை அப்படியே வாயில் விழுங்கி மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓஹியோவில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர், அவ்வழியாக மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த காரை மடக்கி பிடித்துள்ளார்.

காரில் இருந்தவர் சீட் பெல்ட் அணியாததோடு, மயங்கி நிலையில் இருப்பதை பார்த்து, மூச்சு விட முடிகிறதா? என வினவியுள்ளார். போலீசாரின் பரிவை கண்டு மனமுடைந்த அந்த நபர், தம்மை மன்னித்து விடும்படி கூறியுள்ளார்.

மேலும் போலீசாரின் வசம் சிக்காமல் இருப்பதற்காக கஞ்சா பொட்டலத்தை அப்படியே விழுங்கியதாகவும், அதனால் மூச்சு விட முடியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த நபரை வெளியே வரவழைத்த காவலர், அவருக்கு முதலுதவி அளித்து, கஞ்சா பொட்டலத்தை வாந்தி எடுக்க உதவியுள்ளார்.