ஈக்வடார் நாட்டில் பொருளாதார நெருக்கடி.. 3-வது நாளாக நீடிக்கும் பொதுமக்கள் போராட்டம்!!

ஈக்வடார் நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மாறி வருகிறது.

ஈக்வடார் நாட்டில் பொருளாதார நெருக்கடி.. 3-வது நாளாக நீடிக்கும் பொதுமக்கள் போராட்டம்!!

ஈக்வடார் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து, அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து விட்டன. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளான மக்கள், பொறுமை இழந்து வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சமாதானப்படுத்த முயற்சிக்காத அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ, இலங்கை அதிபர் போன்றே  மக்கள் போராட்டத்தை அடக்க  காவல்துறையை ஏவி விட்டுள்ளார்.

இது பல நகரங்களில்  மோதலாக மாறியுள்ளது. புயோ நகரில் காவல்துறையினர் கையெறி குண்டு வீசியதில் ஒருவர் உயிரிழந்தார். குயிட்டா நகரில் காவல்துறையின் கண்ணீர் புகை குண்டுகளை கையில் பிடித்து திருப்பி எறிந்து பொதுமக்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். நகரின் பல பகுதிகளில் மோதல் நடந்து வருகிறது.

நாளுக்கு நாள் மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் ஈக்வடார் அரசு தற்போது ராணுவத்தை களமிறக்கியுள்ளது. ஆனால் விலைவாசி குறையும் வரை போராட்டம் தொடரும் என மக்கள்  உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.