பொருளாதார தேக்க நிலை...இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டுமா இந்தியா?!!

இலங்கை நாடாளுமன்றத்தின் அறிக்கையின்படி, IMF உடனான நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் தற்போதைய நிலை குறித்து நிதி அமைச்சரிடம் மிலிந்த மொரகொடா விளக்கினார்.

பொருளாதார தேக்க நிலை...இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டுமா இந்தியா?!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இந்தியாவிற்கான இலங்கை உயர் ஆணையர் மிலிந்த மொரகொடா சந்தித்து பேசியுள்ளார்.  அவசர காலங்களில் இந்தியா செய்த உதவிக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

கடன் சீரமைப்பு:

இலங்கை நாடாளுமன்ற அறிக்கையின்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் தற்போதைய நிலை குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மிலிந்த மொரகொடா விளக்கியுள்ளார்.  தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பின்னணியில்,இலங்கை அமைச்சர் மொரகொடா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் சீதாராமனுடன் இந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இலங்கைக்கான உதவி குறித்து மற்றொரு சந்திப்பை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும், இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் தேக்கநிலை நாட்டின் வறுமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் மீது இவை ஏற்படுத்தும் கடுமையான விளைவுகள் குறித்தும் மொரகொடா நிதி அமைச்சருக்கு விளக்கியுள்ளார்.

பொருளாதார ஒருங்கிணைப்பு:

முதலீடு, சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக பொருளாதார ஒருங்கிணைப்பின் மூலம் இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கை வகிக்க முடியும் என உயர் ஆணையர் வலியுறுத்தியுள்ளார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   பணமதிப்பு நீக்கம்...மத்திய அரசை கண்டித்த உச்சநீதிமன்றம்!!!