ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான்..தலைமை அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்..!

ட்விட்டர் தலைமை அலுவலகத்திற்கு SINK உடன் நுழைந்த வீடியோ வைரல்..!

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான்..தலைமை அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்..!

ட்விட்டரை வாங்கிய எலான்:

ட்விட்டர் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அதிரடியாக வாங்கியுள்ளார். சுமார் 44 மில்லியன் டாலர்கள் மதிப்பில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக தெரிவித்த எலான் மஸ்க், போலிக் கணக்குகள் தொடர்பாக உரிய தகவல்கள் அளிக்க மறுத்ததால் அம்முடிவை கைவிட்டதாக அறிவித்தார். 

SINK உடன் வருகை:

இதனை எதிர்த்து ட்விட்டர் வழக்கு தொடர்ந்த நிலையில், நேற்று மாலைக்குள் ஒப்பந்தத்தை முடிக்க நீதிமன்றம் கெடு விதித்தது. இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டரின் தலைமையகத்துக்கு கை கழுவும் sink உடன், நேற்று எலான் மஸ்க் சென்றார். 

தலைமைகள் நீக்கம்:

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் வாங்கி விட்டதாகவும் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் ஆகிய உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.