கடவுளின் ஆசிர்வாதத்தில் அனைத்து சரியாகும்.. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை..!

நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு அனைவரும் தயாராக வேண்டும் - ரணில் விக்ரமசிங்கே..!

கடவுளின் ஆசிர்வாதத்தில் அனைத்து சரியாகும்.. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை..!

அனைத்து கடவுளின் ஆசிர்வாதத்துடன் அடுத்த ஆண்டுக்குள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்று நம்புவதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரசிங்கே தெரிவித்துள்ளார். 

பௌத்த சமயத்தவர்களால் மிக உயர்வாக மதிக்கப்படுகின்ற ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் நிறைவு நாள் விழாவில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர், பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள சூழ்நிலையில் கண்டி பெரஹர இடம்பெறுவது கடவுளின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக கருதுவதாகக் கூறினார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழல் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அனைத்து சவால்களிலிருந்தும் மீண்டெழுந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு அனைவரும் தயாராக வேண்டும் என்றும் கூறினார்.