சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிப்பு!

விமானங்களுக்கான தடைகளை அடுத்த மாதம் வரை நீட்டித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிப்பு!

சர்வதேச விமானங்களுக்கான தடையை அடுத்த மாதம் வரை நீட்டித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, சர்வதேச அளவிலான விமான சேவைகள் முடக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் ஒமிக்ரான் அதிவேகமாக பரவத்தொடங்கியதை அடுத்து, சர்வதேச விமான சேவைகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சர்வதேச விமானங்களுக்கான தடையை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டித்து விமான போக்குவரத்து அமைச்சகம் கடிதம் வாயிலாக உத்தரவு பிறப்பித்துள்ளது.