ரஷ்யா, துருக்கி நாடுகளின் எதிர்ப்பையும் மீறி நேட்டோவில் சேர விண்ணப்பத்தை சமர்பித்த பின்லாந்து மற்றும் ஸ்வீடன்!

துருக்கியின் எதிர்ப்பையும் மீறி, நேட்டாவில் உறுப்பினராக சேர்வதற்கான விண்ணப்பத்தை பின்லாந்து மற்றும் ஸ்வீடன் சமர்பித்துள்ளன.

ரஷ்யா, துருக்கி நாடுகளின் எதிர்ப்பையும் மீறி நேட்டோவில் சேர விண்ணப்பத்தை சமர்பித்த பின்லாந்து மற்றும் ஸ்வீடன்!

நேட்டோவில் சேர உக்ரைன் ஆர்வம் காட்டியதால்,  அந்நாட்டின் மீது படையெடுத்த ரஷ்யா நகரங்களை சின்னாபின்னமாக்கியுள்ளது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், நேட்டோவில் சேர விரும்புவதாக  ரஷ்யாவின் அண்டை நாடுகளான ஸ்வீடனும், ஃபின்லாந்தும் அறிவித்தன. இது ரஷ்யாவுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ஸ்காண்டிநேவிய நாடுகள் சட்டவிரோதமாக போராடி வரும் குர்திஷ் போராளிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாகவும், அவர்களை நேட்டோவில் இணைக்க கூடாது எனவும் துருக்கி அதிபர்   எர்டோகன்  கூறியுள்ளார்.

இந்தநிலையில், இதனை கண்டுகொள்ளாத  ஸ்வீடன் மற்றும் பின்லாந்து  நேட்டோவில் சேர்வதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளன. இதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றுள்ளதோடு, அதனை பரிசீலனை செய்யும் பணியை தொடங்க அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.