இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்தன் சிரிங்லா சந்திப்பு...

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்தன் சிரிங்லா சந்தித்து பேசினார்.  

இலங்கை பிரதமர்  ராஜபக்சேவுடன் இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்தன் சிரிங்லா சந்திப்பு...

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்தன் சிரிங்லா சந்தித்து பேசினார்.

இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்தன் சிரிங்லா, 4 நாட்கள் பயணமாக கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு சென்றார்.இந்த நிலையில் நேற்று  அவர் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்தார். பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இது ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக சிரிங்லா தெரிவித்தார். இதுபோல், அதிபர் கோத்தபய ராஜபக்சேவையும் சந்திக்கிறார். முன்னதாக, கொழும்பு நகரில் உள்ள காந்தி சிலைக்கு வெளியுறவு செயலாளர் சிரிங்லா மரியாதை செலுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தை பார்வையிட்டார். இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை அவருக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர். யாழ்ப்பாணம் கலாசார மையத்தையும் அவர் பார்வையிட்டார்.