இலங்கையில் மீண்டும் தேர்தல் நடத்த முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா வலியுறுத்தல்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் தேர்தல் நடத்த முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் தேர்தல் நடத்த முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா வலியுறுத்தல்!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் ஆளும் அரசு மீது கடுங்கோபத்தில் இருக்கும் மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகுவதுடன் குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

ஆனால் தனது பதவியை ராஜினாமா செய்ய அதிபர் கோத்தபய திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து மீண்டும் தேர்தல் நடத்தி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என முன்னாள் அதிபரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். மேலும் நெருக்கடியான வேளையில் அரசியல் தலைவர்கள் மக்களின் பக்கம் நிற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.