அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உடல்நல குறைவு..மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உடல்நல குறைவு..மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்கா முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கலிபோர்னியாவில் உள்ள இர்வின் மருத்துவமனையில் அமெரிக்கா முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் வேறு நோய் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது செய்தித் தொடர்பாளர் ஏஞ்சல் யூரேனா தெரிவித்துள்ளார்.

அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.