கோத்தபய ராஜபக்சே பதவி விலகல் : நாளைய தேதியிட்டு கையெழுத்து போட்டதாக தகவல் !!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நாளை பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார். 

கோத்தபய ராஜபக்சே பதவி விலகல் : நாளைய தேதியிட்டு கையெழுத்து போட்டதாக தகவல் !!

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசிய பொருட்கள், எரிபொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. இதனால், அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கையாக அங்கிருந்து தப்பிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் கசிந்தன.

இதனையடுத்து அவர் நாளை தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்வார் எனவும், புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலானது வருகிற 20ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது பதவியை ராஜினாமா செய்து, அதுதொடர்பான கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.