இலங்கை திரும்பிய கோத்தபய ராஜபக்ச.. மீண்டும் போராட்டம் வெடிக்க வாய்ப்பு..! ராணுவம் குவிப்பு..!

நாடோடியாக நாடு நாடாக சுற்றித்திரிந்த கோத்தபய ராஜபக்சே.. அமைச்சர்கள் , கட்சியினர் வரவேற்பு..!

இலங்கை திரும்பிய கோத்தபய ராஜபக்ச.. மீண்டும் போராட்டம் வெடிக்க வாய்ப்பு..! ராணுவம் குவிப்பு..!

நாட்டை விட்டு வெளியேற்றம்:

இலங்கையில் பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறிய கோத்தபய ராஜபக்சே, அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதனையடுத்து, ரணில் விக்ரமசிங்கே புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 

நாடோடியாக திரிந்த கோத்தபய ராஜபக்ச:

இலங்கையில் இருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்சே, முதலில் மாலத்தீவுக்கும், அடுத்து சிங்கப்பூருக்கும் சென்றார். அங்கு விசா காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, கடைசியாக தாய்லாந்தில் தஞ்சமடைந்தார். அவர் மீண்டும் நாடு திரும்புவதற்கு உரிய வழிவகைகளை செய்து தருமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு, கோத்தபயவின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை வைத்தது. 

நாடு திரும்பிய கோத்தபய:

இலங்கை முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும், பாதுகாப்பும் கோத்தபய ராஜபக்சேவுக்கும் வழங்கப்படும் என்று இலங்கை அரசும் உத்தரவாதம் அளித்தது. இதனையடுத்து, தாய்லாந்தில் இருந்த கோத்தபய ராஜபக்சே, நள்ளிரவு இலங்கை திரும்பினார். தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக அவர் இலங்கை வந்ததாகக் கூறப்படுகிறது. 

இராணுவம் குவிப்பு:

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வந்த அவரை, அமைச்சர்கள் மற்றும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி எம்பிக்கள் வரவேற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோத்தபய ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பியுள்ளதை அடுத்து, அசாதாரண சூழல் ஏற்படுவதை தவிர்க்க முக்கிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.