இலங்கையில் தொடரும் போராட்டம் : தடுமாற்றம் கண்டுள்ள அரசாங்கம் !!

இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதும், அனைத்து கட்சி ஆட்சியை நடைமுறைக்கு கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

இலங்கையில் தொடரும் போராட்டம் : தடுமாற்றம் கண்டுள்ள அரசாங்கம் !!

இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நேற்று முன் தினம் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் நுழைந்தனர். இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடினார். மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து 4 அமைச்சர்கள் பதவி விலகியதால் இலங்கை அரசு நிர்வாகம் தடுமாற்றம் கண்டுள்ளது. இந்த நிலையில், தப்பி ஓடிய அதிபர் 13 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே நேற்று அவசர அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதும் இலங்கையில் அனைத்து கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்த கூட்டணி ஆட்சி இலங்கையில் அமைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

மறுபுறம், அதிபர் கோத்தபய அதிகாரப்பூர்வமாக பதவியிலிருந்து விலகும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இதனிடையே,அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அவரது மகன், மனோஜ் ராஜபக்சவின் இல்லத்தையும் முற்றுகையிட்டனர். இதனால் நாட்டில் அமைதியை நிலைநாட்ட  மக்கள் அமைதி காக்க வேண்டுமென ராணுவம் வலியுறுத்தி உள்ளது.