விமானி அறைக்குள் புகுந்த பயணி...கட்டுபாட்டு கருவிகளை உடைத்த சம்பவம்...

பயணி ஒருவர் திடீரென விமானியின் அறைக்குள் நுழைந்து கட்டுபாட்டு கருவிகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விமானி அறைக்குள் புகுந்த பயணி...கட்டுபாட்டு கருவிகளை உடைத்த சம்பவம்...

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் இருந்து மியாமிக் என்ற பகுதிக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் விமானம் செல்ல இருந்ததாக சொல்லப்படுகிறது.இந்த விமானத்தில் 121 பயணிகள் என 6 விமான பணியாளர்கள் இருந்துள்ளனர்.

விமானம் புறப்பட தயாரான நிலையில் பயணி ஒருவர் எதிர்பாராத விதமாக விமானியின் அறைக்குள் நுழைந்ததாக சொல்லப்படுகிறது.அந்த பயணி கன்ட்ரோல் கருவிகளை கண்மூடித்தனமாக தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விமானி அவரை தடுக்க முயற்சித்த போதும் பயணி அதனை கண்டு கொள்ளாமல் கருவிகளை தொடர்ந்து சேதப்படுத்தி வந்ததாக கூறுகின்றனர்.

மேலும் அந்த பயணியானவர் கருவிகளை சேதப்படுத்தி விட்டு காக்பிட் ஜன்னல் வழியாக கீழே குதிக்க முயன்றதாக சொல்லப்படுகிறது.இதற்கிடையில் விமான பணியாளர்கள் அவரை பிடித்து விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.அந்த பயணி செய்த இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரப்பரப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.மேலும் அந்த நபர் விமான அறைக்குள் இருந்த கருவிகளை தாக்கியதற்கான காரணங்கள் குறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.