அமெரிக்காவில் ஆசிய வம்சாவளியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு.!!

அமெரிக்காவில், ஆசிய வம்சாவழியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சான்பிரான்சிஸ்கோ மேயர் லண்டன் பிரீட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஆசிய வம்சாவளியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு.!!

அமெரிக்காவில், ஆசிய வம்சாவழியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சான்பிரான்சிஸ்கோ மேயர் லண்டன் பிரீட் தெரிவித்துள்ளார்.

2021-ல் மட்டும் அந்த நகரில் ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 60 என்றும், இது கடந்த காலங்களை விட 560 சதவீதம் அதிகம் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை  தலைமை  அதிகாரி பில் ஸ்காட், ஆசிய வம்சாவழியினருக்கு எதிரான குற்றங்களை தடுக்க உரிய ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.