தொடங்குகிறது இந்தியா இலங்கை படகு சேவை!!!

தொடங்குகிறது இந்தியா இலங்கை படகு சேவை!!!

இந்தியாவுக்கு வரும் பௌத்த யாத்திரிகர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்றும், தென்னிந்தியாவில் இருந்து இலங்கையின் திருகோணமலை மற்றும் கொழும்புக்கு பயணிகள் போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்படும்.

தொடங்கும் படகு சேவை:

யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் புதுச்சேரிக்கும் இடையேயும் இந்தியா-இலங்கை இடையே படகு சேவை விரைவில் தொடங்கவுள்ளது.  ஊடக அறிக்கைகளின் படி அடுத்த மாதம் சேவை தொடங்கும் என தெரிய வருகிறது.

இந்த படகு சேவை அடுத்த ஆண்டு ஜனவரி நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.  இந்த சேவைக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கையின் அடிப்படையில்:

மேலும், தலைமன்னாருக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக இதுவரை உறுதியான முடிவு எட்டப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.   இரு நாட்டு மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் படகு சேவையை தொடங்கவுள்ளதாக டி சில்வா தெரிவித்துள்ளார்.  

அமைச்சர் தெரிவித்தபடி, படகு உரிமையாளர்களுடனான கலந்துரையாடலின் போது, ​​துறைமுகங்களில் தற்போதுள்ள வசதிகளை மேலும் மேம்படுத்தி பயணிகள் சேவையை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  உலகை தாக்கி அளிக்கும் ஏவுகணை....உலகை மிரட்டும் ரஷ்யா....