உக்ரைனுக்காக இணைந்து போராட தயாராகும் இந்தியாவும் அமெரிக்காவும்!!!

உக்ரைனுக்காக இணைந்து போராட தயாராகும் இந்தியாவும் அமெரிக்காவும்!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான ஆக்கிரமிப்பு குறித்த கேள்விக்கு இந்தியா உட்பட எங்களின் அனைத்து நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுடன் நாங்கள் தீவிரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

இந்தியாவுடன்...:

உக்ரைனில் அமைதியை மீட்டெடுப்பது அவசியம் என்பதில் இந்தியாவுடன் நாங்கள் உடன்படுகிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் மக்களுக்கான இந்தியாவின் ஆதரவை வரவேற்கிறோம் எனவும் இன்றைய சகாப்தம் போர்க்காலம் அல்ல என்று கூறும் பிரதமர் மோடியின் கருத்துக்கு நாங்களும் உடன்படுகிறோம் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து தொடர்பில்:

உக்ரைன் அழிவிற்கு ரஷ்யாவை பொறுப்பேற்க நாங்கள் என்ன செய்ய முடியும் என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.  மேலும்,  ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிக்கும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான உறுதிப்பாட்டை இந்தியாவும் அமெரிக்காவும் பகிர்ந்து கொள்கின்றன எனவும் இது இந்தியாவுடனான நமது உலகளாவிய கூட்டாண்மையின் மையத்தில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இணைந்து போராடுவோம்:

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான ஆக்கிரமிப்பு குறித்த கேள்வியில் இந்தியா உட்பட எங்களின் அனைத்து நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுடன் நாங்கள் மிகவும் தீவிரமான விவாதங்களில் ஈடுபட்டுள்ளோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.  உக்ரைனில் நடந்த அட்டூழியங்களுக்கு ரஷ்யாவை பொறுப்பேற்க வைக்க வேண்டியதன் அவசியத்தை சர்வதேச சமூகம் வலுவாக அங்கீகரிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார் நெட் பிரைஸ்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  மோடியை கருத்தை ஏற்கும் உலக தலைவர்கள்....உலகின் சிறந்த தலைவர் மோடி!!!