அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி இந்தியா... கமலா ஹாரிஸ் பெருமிதம்...

அமெரிக்காவின் மிக முக்கியமான பங்குதாரர் இந்தியா என, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி இந்தியா... கமலா ஹாரிஸ் பெருமிதம்...

அமெரிக்காவின் மிக முக்கியமான பங்குதாரர் இந்தியா என, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் அந்நாட்டு துணை அதிபரும், இந்திய வம்சாளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் மிக முக்கியமான பங்குதாரர் இந்தியா என பெருமிதம் அடைந்துள்ளார். தொற்றுநோயின் ஆரம்பத்தில் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளின் முக்கிய ஆதாரமாக இந்தியா இருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவில் கொரோனா அதிகரித்ததையடுத்து அதனை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், தடுப்பூசி போடும் பணியையும் வேகப்படுத்தியதை கண்டு அமெரிக்கா பெருமிதம் கொள்வதாக கூறியுள்ளார்.

பருவநிலை மாற்றத்தை இந்தியா தீவிரமாக எடுத்து வருவதாக கூறியுள்ள கமலா ஹாரிஸ், இரு நாடுகளும் இணைந்து செயலாற்றும் போது, அது உலகில் பெரும் தாக்கத்தை  ஏற்படுத்தும் என்பது உறுதி என தெரிவித்துள்ளார்.