90° கழுத்து திரும்பிய பாகிஸ்தானிய பெண்ணுக்கு இலவசமாக சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்:

சரியான சிகிச்சை முறை இல்லாத காரணத்தால், அவதிப் பட்டுக் கொண்டிருந்த குல்-லுக்கு, இலவசமாகவே இந்திய மருத்துவர் சிகிச்சை அளித்தது தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

90° கழுத்து திரும்பிய பாகிஸ்தானிய பெண்ணுக்கு இலவசமாக சிகிச்சை செய்த  இந்திய மருத்துவர்:

பாகிஸ்தானைச் சேர்ந்த அஃப்ஷீன் குல், 10 மாத குழந்தையாக இருக்கும் போது, ஒரு விபத்துக் காரணமாக கழுத்து எலும்பில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவரது சகோதரியின் கையில் இருந்து தவறி விழுந்ததால், அவரது கழுத்து 90 டிகிரிகளுக்கு திரும்பியிருக்கிறது.

சில நாட்களில் சரி ஆகி விடும் என எதிர்பார்த்தனர். ஆனால், வலிதான் அதிகமானதே தவிற, கழுத்து சரியாகவில்லை. இந்நிலையில், டெல்லி அப்போலோ மருத்துவமனையில் மருத்துவராக இருக்கும் ராஜகோபாலன் கிருஷ்ணன் என்பவர், அந்த பெண்ணிற்கு இலவசமாக நான்கு சிகிச்சை செய்து, அரிதான அவரது நிலையைத் திருத்தம் செய்திருக்கிறார்.

சுமார் 12 வருடங்களாக, இந்த அரிய வகை பிரச்சனை காரணமாக, பள்ளிக்கு செல்ல இயலாமல், நண்பர்கள் இல்லாமல் தவித்து இருக்கிறார். அதை விட, தினசரி செயல்களான உணவு உண்ணுவது, நடப்பது, ஏன் பேசுவதறு கூட சிரமப்பட்டிருக்கிறார் குல்.

செரிபரல் பால்சி எனும் நோயாலும் அவதிப்பட்டுக் கொண்டிருந்த குல்-லால், படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. மேலும், சிகிச்சைக்காக பணம் செலவழிக்கும் அளவில் வசதியும் இல்லாத காரணத்தால், குல், சாதாரண மனித வாழ்க்கையை அனுபவிக்காமல் தவித்து வந்தார்.

கடந்த 2021ம் ஆண்டு, இந்தியா வந்தடைந்த குல்-க்கு, ஆன்லைன் மூலம் பணம்  சேர்த்து, சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது. உலகிலேயே முதலாவதாக இருக்கும் இந்த அரிய இயலாமை, கிருஷ்ணன் மருத்துவரால் மட்டுமே சரியானது என குல்-லின் சகோதரர் யாகூப் கும்பர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். மேலும், பேச முடியாமல் தவித்து வந்த குல், தற்போது, சிரித்துப் பேசுகிறார் என நெகிழ்ந்தனர் குல்-லின் குடும்பத்தார்.

மருத்துவர் குல்-லின் இந்த சிறப்பு சிகிச்சை, பலரது பாராட்டுகளைக் குவித்து வர, குல்- தனது இயல்பு வாழ்க்கையை முதன் முறையாக வாழத் தொடங்குவதற்காக அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.