சீன அரசை கைப்பற்றிய ராணுவம்.. அதிபர் ஜி ஜிங்பிங் கைதா? அப்போ இந்தியாவுக்கு கொண்டாட்டம் தான்..!

சீன அரசை ராணுவம் கைப்பற்றி விட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவல்..!

சீன அரசை கைப்பற்றிய ராணுவம்.. அதிபர் ஜி ஜிங்பிங் கைதா? அப்போ இந்தியாவுக்கு கொண்டாட்டம் தான்..!

சீன அதிபர் கைது?

சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும், உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு கடந்த 16ம் தேதி பெய்ஜிங் திரும்பிய அவரை, விமான நிலையத்தில் வைத்தே சீன ராணும் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

உறுதி செய்யப்படாத தகவல்:

மேலும், சீன அரசை ராணுவம் கைப்பற்றி விட்டதாகவும், பெய்ஜிங் நகரம் முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சிலர் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். எனினும், இந்த தகவல் அனைத்தும் அரசாங்கத்தால் உறுதி செய்யப்படவில்லை. 

சீன அரசியலில் பரபரப்பு:

சீன கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது அரசு ஊடகத்திலோ இன்னும் அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் வெளியாகவில்லை. எனினும், சீன அரசியலில் இந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

இந்தியாவுக்கு அதிக பலன்:

ஒருவேளை சீன அதிபர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பது உண்மையானால், சீனாவின் வர்த்தகம், உற்பத்தி, ஏற்றுமதி போன்றவை தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன்காரணமாக, சீனாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நாட வாய்ப்புள்ளதாகவும், இதனால் இந்தியாவுக்கு அதிக பலன் கிடைக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.