உலக அளவில் அவப்பெயர் பெற்ற இந்தியா....காரணம் இதுவா?!!!

உலக அளவில் அவப்பெயர் பெற்ற இந்தியா....காரணம் இதுவா?!!!

இந்தியாவில் உள்ள குடிமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவில் வெளியே செல்ல வேண்டாம் என தென் கொரிய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரியாவின் வேண்டுகோள்:

மகாராஷ்டிராவின் மும்பை தெருவில் தென்கொரிய பெண் ஒருவர் இரவில் தனியாக நடந்து சென்றுள்ளார்.  அப்போது அவர் மீது பாலியல் சீண்டல் நடந்துள்ளது. இதனைத் தொடந்து மக்களின் பாதுகாப்பு கருதி இந்தியாவில் உள்ள தென்கொரிய மக்கள் இரவில் வெளியே செல்ல வேண்டாம் என தென் கொரிய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  இந்திய நகரங்களில் இரவில் வெளியே செல்வது பாதுகாப்பானது அல்ல என்றும் கூறியுள்ளது. 

நடந்தது என்ன?:

தென்கொரியாவை சார்ந்த பெண் ஒருவர் மும்பையின் புறநகர் பகுதியில் இரவு எட்டு மணியளவில் 'நேரலை' செய்து கொண்டிருந்தார்.  அப்போது, ​​அந்த பெண்ணின் அருகில் வந்த இளைஞர் ஒருவர், பெண்ணின் கையைப் பிடித்து இழுக்க முயற்சித்துள்ளார்.  அதோடு நில்லாமல் அந்த பெண்ணை பின்தொடர்ந்துள்ளார்.  இந்த சம்பவத்தின் வீடியோ வைரலானதையடுத்து, அந்த பெண்ணை துன்புறுத்தியவர்களை கைது செய்யுமாறு சமூக வலைதளங்களில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன?:

இதற்கிடையில், தென் கொரிய தூதரகம் இந்தியாவை தொடர்பு கொண்டதா என்பது குறித்த கேள்விக்கு இதுவரை எந்த தகவலும் இல்லை என்று வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.  மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உள்ளூர் நிர்வாகத்தினால் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

காவல்துறையின் நடவடிக்கையால் கொரிய பெண் மகிழ்ச்சி:

இச்சம்பவத்திற்குப் பிறகு, தென் கொரியாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் தனது அறிக்கையில் காவல்துறையின் நடவடிக்கை மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து பேசிய யூடியூபர் ஹியோஜியோங் பார்க், இது போன்ற சம்பவம் இதற்கு முன்பும் எனக்கு முன்பு வேறொரு நாட்டிலும் நடந்தது எனவும் ஆனால் அந்த நேரத்தில் காவல்துறையை அழைக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.  

ஆனால் இதற்கு எதிர்மாறாக இந்தியாவில் மிக வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கடந்த மூன்று வாரங்களாக மும்பையில் இருப்பதாகவும், இப்போது நீண்ட காலம் தங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

குற்றவாளிகள்:

மும்பையில் நேரடி ஒளிபரப்பின் போது தென் கொரிய பெண் யூடியூபரை துன்புறுத்திய இரண்டு குற்றம் சாட்டப்பட்ட மொபீன் சந்த் முகமது ஷேக் மற்றும் முகமது நகிப் சத்ரியாலம் அன்சாரி ஆகியோர் ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   குஜராத்தில் முடிவடைந்த முதற்கட்ட தேர்தல்...!!!!