சர்வதேச மன்றத்தில் சீனா, பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த ஜெய்சங்கர்....வாயடைத்து போன உலக நாடுகள்!!!

சர்வதேச மன்றத்தில் சீனா, பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த ஜெய்சங்கர்....வாயடைத்து போன உலக நாடுகள்!!!

ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பூட்டோவின் 'காஷ்மீர் கருத்து' குறித்து கடுமையாக பதிலளித்த வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாட்டிற்கு இது நிச்சயமாக பொருந்தும் என்று கூறியுள்ளார்.

மேலும் தெரிந்துகொள்க:   ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்குகிறார் வெளியுறவுதுறை அமைச்சர்!!!

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு:

சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மைக்கான புதிய திசைகள் என்ற தலைப்பில் ஒரு திறந்த விவாதத்திற்குத் தலைமை தாங்கிய ஜெய்சங்கர், சீனா மற்றும் பாகிஸ்தானை சுட்டிக்காட்டி, பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களான சீனா மற்றும் பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் குற்றவாளிகளை நியாயப்படுத்தவும் பாதுகாக்கவும் சர்வதேச மன்றங்களை தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.  

அதே நேரத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பிய பின்னர், ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.  அதாவது அல்-கொய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடனை உபசரித்து அண்டை நாட்டு நாடாளுமன்றத்தை தாக்கிய நாட்டிற்கு பிரசங்கம் செய்ய உரிமை இல்லை என்று ஜெய்சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.   

தவறாக பயன்படுத்தப்படுகிறது:

தொடர்ந்து பேசிய அவர் மோதல் சூழ்நிலைகளின் தாக்கம், வழக்கம் போல் பலதரப்பு வர்த்தகம் இனி தொடர முடியாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது எனவும் உலகம் முழுவதும் தீவிரவாதத்தின் சவாலை கடுமையாக எதிர்த்துப் போராடி வரும் நிலையில், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் மூளையாக செயல்பட்டவர்களை பாதுகாக்கவும் நியாயப்படுத்தவும் சர்வதேச மன்றங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

மேலும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐக்கிய நாடுகள் சபையில் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் முன்மொழிவுகளை சீனா பலமுறை தடுத்துள்ளதையும் அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.  

மூக்கையுடைத்த ஜெய்சங்கர்:

ஐ.நா. , சபையில் பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் பிலாவல் பூட்டோ காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் எழுப்பியதற்கு ஒசாமா பின்லேடனுக்கு விருந்தளித்து, அண்டை நாட்டு நாடாளுமன்றத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த வைத்த நாட்டிற்கு, இந்த சபையில் வந்து பிரசங்கம் செய்யும் அளவுக்கு நம்பகத்தன்மை இல்லை என ஜெய்சங்கர் கடுமையாக பதிலளித்துள்ளார்.   

இன்றும் பொருந்தும்?:

உலகம் வன்முறை, ஆயுத மோதல்கள் போன்ற அவசரநிலைகளால் சிக்கித் தவிக்கும் நேரத்தில், மகாத்மா காந்தியின் இலட்சியங்களானது உலகின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை வழிநடத்துவதற்கும் உறுதி செய்வதற்கும் பொருத்தமானதாக இருப்பதாக கூறியுள்ளார் ஜெய்சங்கர்.

ஐ.நா. சபையின் வடதிசையில் இருந்த புல்வெளியில் மகாத்மா காந்தியின் சிலையை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுடன் திறந்து வைத்த பின்னர் ஜெய்சங்கர் மேற்கூறிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.  புகழ்பெற்ற சிற்பி ராம் சுதாரால் உருவாக்கப்பட்ட இந்த மகாத்மா காந்தியின் சிலையை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ”இது இந்தியர்களின் நிலம்.  துரத்திய பின்னரே இறக்கும்” சீனாவிற்கு இந்திய வீரர்களின் பதிலடி...அன்று முதல் இன்று வரை!!!