சுனாமி தாக்கப்பட்ட டோங்கோ நாட்டுக்கு உதவிக்கரம் நீட்டும் ஜப்பான்!!

கடலுக்கு அடியில் எரிமலை வெடித்து உருவாகிய சுனாமியால் ஒரு தீவு பகுதி முற்றிலும் அழிந்து போன நிலையில் டோங்கோ நாட்டிற்கு ஜப்பான் உதவி செய்து வருகிறது.

சுனாமி தாக்கப்பட்ட டோங்கோ நாட்டுக்கு உதவிக்கரம் நீட்டும் ஜப்பான்!!

கடலுக்கு அடியில் ஏற்பட்ட சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட டோங்கா நாட்டுக்கு ஜப்பானில இருந்து உதவி பொருட்கள் விரைந்துள்ளன.

ஜப்பானின்  கொமாகி விமான தளத்தில் இருந்து மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பெட்டகங்கள் டோங்கா எடுத்து செல்லப் பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் அங்கு பாதிக்கப்பட்டவர் களுக்கு வழங்க எடுத்து செல்லப்படுகிறது. இதே போன்று சீனாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் மற்றும் தண்ணீர் விநியோகத்தை சீனாவுக்கான தூதர் அங்கு தொடங்கி வைத்தார். மேலும் உதவி பொருட்கள் டோங்கா நாட்டுக்கு சீனாவில் இருந்து வருகை தர உள்ளதாகவும் அவர் கூறினார்.