இந்தியாவுடனான தமது தொடர்பு குறித்து கேலியாக பேசிய ஜோ பைடன்: வெள்ளை மாளிகையில் சிரிப்பலை...

வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை வரவேற்ற ஜோபைடன், இந்தியாவுடனான தமது தொடர்பு குறித்து கேலியாக பேசியுள்ளார்.

இந்தியாவுடனான தமது தொடர்பு குறித்து கேலியாக பேசிய ஜோ பைடன்: வெள்ளை மாளிகையில் சிரிப்பலை...

 வெள்ளை மாளிகையில் நேற்று ஜோபைடன் - மோடி இடையேயான முதல் நேரடி சந்திப்பு நடைபெற்றது. அப்போது தமது இந்திய தொடர்பு குறித்து பேசிய ஜோபைடன் , 1972 -ஆம் ஆண்டு தனது 28-வது வயதில் முதல் முறையாக செனட் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, மும்பையில் பிடென் என்ற நபரிடமிருந்து தனக்கு கடிதம் ஒன்று வந்ததாகவும், அதனை தான் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை என்றும் அடுத்த நாள் செய்தியாளர் சந்திப்பின் போது இந்திய பத்திரிக்கையாளர் ஒருவர் இந்தியாவில் ஐந்து பைடன்கள் இருப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார்.

கிழக்கிந்திய தேயிலை கம்பெனியில் ஜார்ஜ் பைடென் என்ற பெயரில் கேப்டன் ஒருவர் இருந்ததாக குறிப்பிட்ட அவர், எவ்வாறாயினும், எனது இந்திய தொடர்பு குறித்து இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறினார். இதற்கு பதிலளித்த மோடி இந்தியாவுடனான ஜோபைடனின் தொடர்பு குறித்து சில ஆவணங் களை திரட்டி வந்துள்ளதாக பதிலளித்தார். இதனால் வெள்ளை மாளிகையில் சிரிப்பலை ஏற்பட்டது.