ஒட்டகத்தின் மீது ஏறிச் சென்று கராச்சி புழுதிப் புயல் நிலவரத்தை விளக்கிய செய்தியாளர்!!

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் வீசிய புழுதிப் புயலை பற்றி ஒட்டகம் மீது ஏறிச் சென்று நிலவரத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த செய்தியாளர்.

ஒட்டகத்தின் மீது ஏறிச் சென்று கராச்சி புழுதிப் புயல் நிலவரத்தை விளக்கிய செய்தியாளர்!!

கராச்சி நகரில் வீசப்பட்ட புழுதிப் புயலை பற்றிய தகவல்களை சேகரிக்க களத்திற்கு ஒட்டகத்தின் மீது ஏறிச்சென்று அதனை தொகுத்து வழங்கியுள்ளார்.அவரின் பெயர் சாந்த் நவாப் என்பது குறிப்பிடத்தக்கது.அதில் கருத்துக்களை பதிவிட்ட அவர் ஒல்லியாக இருப்பவர்கள் இதில் சிக்கினால் பறந்து வீச்ப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.அந்த அளவிற்கு காற்றின் வேகம் உயர்ந்து காணப்படுவதாக கூறியுள்ளார்.

அதோடு ஒட்டகத்தின் மீது சவாரி செய்து கொண்டே செய்தியை சொல்கிறார் அவர். நவாபின் இந்த முயற்சி இணையதளத்தில் வைரலாகி உள்ளது. நான் இப்போது அரேபியாவின் பாலைவனத்தில் இல்லை. நம் கராச்சியின் கடற்கரையில்தான் இருக்கிறேன். துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் வீசும் புழுதிப் புயல் தற்போது கராச்சியில் வீசி வருகிறது. இங்கு குளிர்ந்த வானிலை நிலவுகிறது. குளிர்ந்த காற்றையும் உணர முடிகிறது. மக்கள் இந்த புழுதிப் புயலை காண வரலாம். 

காற்றில் எனது தலைமுடி பறக்கிறது, வாய்க்குள் தூசு படிந்துள்ளது, மேலும் எனது கண்ணை கூட திறக்க முடியவில்லை. ஒல்லியாக இருப்பவர்கள் கரையோரம் வராமல் இருப்பது நல்லது. இல்லையெனில் காற்றில் கூட அடித்து செல்லப்படலாம் என அவர் தெரியப்படுத்தியுள்ளார்.