கமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார்... பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்..

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளதாக, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

கமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார்... பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்..

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிசை தேர்வு செய்தது ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக கமலா ஹாரிஸ் இருப்பதாக புகழாரம் சூட்டியுள்ள அவர், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தலைமையின் கீழ் இருதரப்பு உறவுகள் புதிய உயரங்களைத் தொடும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வருமாறு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.