பல உயிர்களை பாதுகாத்து வந்த "கிங் ரேட்" எலி...உயிரிழந்ததாக தகவல்...

கன்னி வெடிகளை கண்டறிந்து நூற்றுக்கணக்கான உயிர்களை பாதுகாத்து கிங் காக செயல்பட்டு வந்ததுள்ளது.

பல உயிர்களை பாதுகாத்து வந்த "கிங் ரேட்" எலி...உயிரிழந்ததாக தகவல்...

கம்போடியாவில் மகாவா என்னும் எலி சுமார் ஐந்து வருடங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட கன்னி வெடிகளை கண்டறிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.இதில் பல உயிர்களை இந்த எலியானது ஆபத்தில் இருந்து காத்திருக்கிறது.ஹீரோ ரேட் என்று பிறரால் பெயர் வைத்து அழைக்கப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.இந்த எலியானது தற்போது APOPO என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தில் அந்த எலியானது உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

கம்போடியாவில் பல வருடங்களாக நடந்து வரும் உள்நாட்டு போர்களில் ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு அதிகமான நிலப்பரப்பில் கன்னிவெடிகளை புதைத்து வைக்கப்பட்டிருந்தன.இதில் சிக்கி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைகள் மற்றும் கால்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே இதில் தான்சானியாவில் பிறந்த இந்த எலியானது கடந்த 2016 ஆம் ஆண்டின் போது கன்னி வெடிகளை கண்டுபிடிப்பதற்காக கம்போடியாவிற்கு வரவழைக்கப்பட்டதாக சொல்கின்றனர்.